அரசியல் களத்தில் இணையும் ரஜினி – கமல்?

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவார்களா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியல் களம் பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க இரண்டாக பிளந்து இரட்டை இலை சின்னமும் முடங்கிப்போய் கிடக்கிறது. கருணாநிதி வயது மூப்பினால் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டி தமிழக அரசியலை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் தலைவராக யார் வரப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவர் மனதிலும் கேள்வியாக நிற்கிறது. … Continue reading அரசியல் களத்தில் இணையும் ரஜினி – கமல்?